கோவிந்தா கோவிந்தா பிளாக்ல புது பொண்ணு (கல்யாணம் ஆனாதான் புது பொண்ணா ?? நாங்களும் சொல்லிக்குவோம் அக்காங் )
வழக்கம்போல மத்தவங்கள மாதிரி எழுதி உங்கள கடுப்படிக்க மாட்டேன் ....
நிச்சயம் சிரிக்கலாம் கொஞ்சம் சிந்திக்கலாம் ....எப்பவாச்சும் சந்திக்கலாம் ...
வாங்க இந்த கிறுக்கியோட பேச.......
அச்சுனு தும்பினாலும் அதுக்கு ஒரு காரணத்தை கண்டுபுடிச்சி அரைமணிநேரம் அதபத்தி பேசுறவங்க அதிகமா இருக்கும் நாடுங்க இது... மூச்சுக்கு (ஆக்சிஜன் ) பஞ்சம் வந்தாலும் வரும் அனா பேச்சுக்கு பஞ்சமே வராது நம்ம நாட்லதான் ....... ஆனாலும் பேச யாரும் பக்கத்துல இல்லாதவங்க எப்படிலாம் கஷ்டபடுறாங்கனு நெனச்சா எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு... ஏன்னா நானும் அப்படி யாரும் இல்லாத தனிமைல இருந்திருக்கேன் .......
அந்த சமயத்துல அறிமுகம் ஆன ஒரு விஷயம்தான் சோசியல் மீடியா (மூஞ்சி புத்தகம், கூகுள் +)........காலேஜிக்கு போனோமா வந்தோம்னு இருந்த நான் இந்த கெணத்துக்குள்ள தொபுகட்டிர்னு குதிச்சிட்டேன் நீச்சல் தெரியாமலே ...... ஆனா இங்க வந்ததும்தான் தெரிஞ்சது நாம மட்டும் இந்த உலகத்துல இல்ல நிறையபேர் இருக்காங்கனு ....காஞ்சிபோன பாலைவனத்துல விடாது மழை பொழிஞ்சா எப்படி சந்தோஷமா இருக்குமோ அவ்ளோ சந்தோசம்.... அதுலயும் லூசுத்தனமா நான் போட்ட சில போஸ்ட் மத்தவங்களுக்கும் புடிச்சதும் இன்னும் சந்தோசம் ...... மூஞ்சில 1000 வாட்ஸ் பல்புதான் போங்க ......... உண்மைலேயே அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கு (2 வருஷமா ) இதால எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அழகானது ...... என்னை எனக்கே புதுசா காட்டியது கண்ணாடி இல்ல இணையம்தான் .......
அதுவரைக்கும் கவிதைன்னு கிறுக்கி கூட இருக்கும் நண்பர்களுக்கு படிச்சி காட்டிகிட்டு இருந்தேன் .....இங்க வந்து அத மத்தவங்களுக்கும் சொல்லி அவங்களும் அத ரசிகிறாங்கனு தெரிஞ்சதும் இன்னும் இன்னும் சந்தோசம்....... சரி இங்க வந்ததுக்கு என்ன காரணம்னு கேக்குறிங்களா ??? சும்மா வெட்டியா இருக்கும்போது உங்களுக்கு கதை சொல்லலாமேனுதான் ....... இனி வாரம் ஒரு கதை சொல்லுறேன் சரியா ?? ஆனா கதை கேட்டுட்டு தூங்ககூடது ஆமா ......
ரொம்ப பேசுறேன்ல ?? என் சுபாவமே அப்படித்தான் லோடலோடா வாய் ...... உங்களையெல்லாம் நான் எப்படி தீபாவளி எப்படி கொண்டாடினேன்கிற கதையோட திரும்பவும் சந்திக்கிறேன் .... இப்போதைக்கு இப்பேதை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் ... வர்டா ......
